2ம் உலக மகா யுத்த முடிவுந்த கையோடு காலணித்துவ படைகள் யாவும் தாமிருந்த கட்டடங்களை விட்டு வெளியேறின.
அவ்வாறு வெளியேறிய படைகளால் கைவிடப்பட்ட கட்டடங்களிலேயே இன்றைய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
ஆன்று இராணுவத் தளபாடக் களஞ்சியமாகவும்,உணவு பதனிடும் இடமாகவும்,இவாகனங்களை பழுது பார்க்குமிடமாகவும் இப்பாடசாலை பிரதேம் இருந்துள்ளது. அதன் சுவடுகளை இன்றும் எமது பாடசாலை பிரதேசத்தில் காணமுடியும். எரிக்களம் பற்றைகளால் சூளப்பட்டு கிடந்த இந்த இடத்தில் அன்று இராணுவ தளபாடக்களஞ்சிய மண்டபம் மட்டுமே சேதமடையாமல் இருந்துள்ளது. அக்காலத்தில் யுத்தத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தகரங்கள்,கட்டடங்கள் ஏலத்தில் விடப்பட்டடன. அப்போது அக்காலத்தில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த பெரியார்கள் சிலரின் மூளையில் உதித்த நற்சிந்தனையே இன்றைய இப்பாடசாலையாகும். அப்பெரியார்கள் அக்கட்டடத்தை உடைக்கவிடாது சொற்ப பணத்திற்கு அதனை வாங்கி அதில் இப்பாடசாலையை ஆரம்பித்தனர்.
அதுவே இப்பாடசாலை ஆகும்.
அதனால் இப்பாடசாலையில் நிறுவனர் என்று எவறும் இல்லை.





