உலகந் தனை காத்திடும் இறையோனே
உயர்வானவனே அருள் தாபரனே
நலமானவனே உனை யாம் தொழுவோம்..
ஞானங்கள் ஈந்திடும் நாயகனே
நல்லவர்கள் நாளும் நிறையும்
வெள்ளைமணல் மீதே உறையும்
கல்விகளை தரும் கலைக்கூடம்
கண்ணியமுடனே வாழ்ந்திடவே
பாலர் நாமும் பயிற்சி பெறும்
பண்புறும் ஆசிரியர் குழுவும்
நாளும் எங்கும் புகழோங்கி
நன்மையுடனே வாழ்ந்திடவே
அன்னை தந்தை போற்றிடுவோம்
மன்னவர்கள் பணியாற்றிடுவோம்
விண்ணை மேவும் கலைகளையே
வேளை தவறாமற் பயில்வோம்
ஓன்றே தெய்வம் என்றிடுவோம்
ஓன்றே குலமாய் வாழ்ந்திடுவோம்
போன்றாய்ப் புகழைக் கொண்டிடுவோம்
கோமான் கருணையைக் கண்டிடுவோம்
உலகந் தனை காத்திடும் இறையோனே
உயர்வானவனே அருள் தாபரனே





