வரலாறு

இல்ல விளையாட்டு போட்டி

IMG_20231110_084440.jpg
IMG_20231110_084440.jpg

தி/தி/வெள்ளைமணல் அல் அஸ்ஹர்; முஸ்லிம் மகா வித்தியாலயம் 70 வருடங்கள் பழமை வாய்ந்தது. 1C தரத்தையுடைய இப்பாடசாலையில் தரம் 06 தொடக்கம் க.பொ.த. (உ.த) வரை 22 வகுப்புப் பிரிவுகளில் முஸ்லிம்,இந்து,கிறிஸ்தவம் என சுமார் 600 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஆரசின் 1000 இடைநிலைப்பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு முதல் உள்வாங்கப்பட்டுள்ளதனால், ஆரம்பப்பிரவு படிப்படியாக நீக்கப்பட்டு வந்துள்ளது.

1946.11.01 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, குடாக்கரை பகுதியில் உள்ள ஒரு தாய்ப்பாடசாலையாகும்.இப்பாடசாலை திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியின், திருகோணமலை நகரில் இருந்து 18 ஆவது கிலோ மீற்றர் வடக்கு நோக்கியதாக, கருமலையூற்று வீதியில் அமைந்துள்ளது.

தி/தி/வெள்ளைமணல் அல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயம் என்ற பெயரில் இன்று அழைக்கப்படும் இப்பாடசாhலை 1946 ஆம் ஆண்டு 11.01 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் போது அன்று அதன் பெயர் தி/அரசினர் முஸ்லிம் சிங்கள கலவன் பாடசாலை எனபதாகும்.